பதிவு செய்த நாள்
01
ஜூன்
2012
11:06
சேலம்: சேலத்தில், வரும் 3ம் தேதி உபன்யாசம் நிகழ்ச்சி நடக்கிறது, என அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் செயலாளர் கிருஷ்ணதாஸ் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:ஸ்ரீல பிரபுபாதர் என்பவர் நிறுவிய அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தில் (இஸ்கான்), இங்கிலாந்தைச் சேர்ந்த பக்தி விகாஸ ஸ்வாமி சேர்ந்து, 1977ம் ஆண்டு இந்தியா வந்தார். பின், வங்காளதேசம், பர்மா, மலேசியா, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை வினியோகம் செய்வதில் ஈடுபட்டு வருகிறார். மேலும், கிருஷ்ண பக்தி தத்துவங்களை ஆங்கிலம், இந்தி மற்றும் வங்காள மொழிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். கிருஷ்ணரின் பக்தி தத்துவங்களை போதிக்கும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின், சேலம் கிளை சார்பில், "பிறப்பிற்கும், இறப்பிற்கும் அப்பால் என்ற தலைப்பில் உபன்யாசம் நிகழ்ச்சி வரும் 3ம் தேதி நடக்கிறது. சேலம், தெய்வீகம் திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், மாலை 6 மணிக்கு பஜனைகள் நடக்கிறது. 7 மணிக்கு குருகுல மாணவர்கள் மந்திரங்கள் வாசிக்கின்றனர். 7.30 மணிக்கு அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் மூத்த சன்னியாசிகளில் ஒருவரான பக்தி விகாஸ ஸ்வாமி உபன்யாசம் நிகழ்த்துகிறார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் சேலம் கிளை நிர்வாகிகள் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.