இந்திலி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை; அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2026 01:02
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலியில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நேற்று நடந்தது. சகலவித திரவியங்களால் மகாபிஷேகம் செய்தபின், சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் தேவா பட்டர் செய்து வைத்தார். கந்தசேனைப்படை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்ட னர்.