பதிவு செய்த நாள்
01
ஜூன்
2012
11:06
ஈரோடு: ஈரோடு, 46 புதூர், வெள்ளாளபாளையம் சக்தி கணபதி, விஜயகணபதி, மதுரைவீரன், மாதேஸ்வர ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 6.15 மணி முதல் 7 மணிக்குள் நடக்கிறது. நேற்று முன்தினம் மஹா கணபதி ஹோமம் நடந்தது.காவிரி தீர்த்தம் எடுத்து வருதல், முதற்கால வேள்வி, முளைப்பாரி அழைத்தல் நடந்தது. நேற்றுகாலை, 8.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, வேத பாராயணம், மூல மந்த்ர ஹோமம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, அஷ்டமூர்த்தி ஹோமம், கோபுர கலச ஸ்தாபனம், இந்திர ஸ்தாபனம், மூர்த்திகள் பிரதிஷ்டை நடந்தது. இன்று காலை, 4.30 மணிக்கு நான்காம் கால வேள்வி, வேத பாராயணம் நடக்கிறது. காலை, 6.15 மணிக்கு விமான கும்பாபிஷேகம், மூலஸ்தானம் கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 7 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது.