Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 16 அடி‌ உயர பிரத்தியங்கிரா தேவி ... சோம்பட்டு பவழக்குடி சித்தர் கோவிலில் குரு பூஜை விழா சோம்பட்டு பவழக்குடி சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் திருத்தல வரலாற்று உற்சவம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் திருத்தல வரலாற்று உற்சவம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
10:02

சிதம்பரம்: சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில் திருத்தல வரலாற்று உற்சவம் நடந்தது.


அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டர் – ரத்தினசாலை அம்மையார் சிதம்பரம் இள மையாக்கினார் கோவில் குளத்தில் மூழ்கி இளமை பெற்றதாக வரலாறு. அதனையொட்டி, ஆண்டுதோறும் தை மாதம் இக்கோவிலில் வரலாற்று உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு சுவாமி வீதியுலா, 9.00 மணிக்கு சிவபெருமான் சிவயோகியார் வடிவில் திருநீலகண்டருக்கு திருவோடு அளித்தல், இரவு 10:00 மணிக்கு சிவபுராணம் வாசித்தல் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுவாமி வீதியுலா, மதியம் 2.30 மணியளவில் புராணம் வாசித்தல், மாலை 3.00 மணிக்கு வரலாற்று உற்ச வமான, இளமையாக்கினார் குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து, தீர்த்தவாரியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கரைக்குடி பழனியப்பன் குடும்பத்தினர் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar