ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலில் ஜன.,28ல் தைப்பூச தெப்ப திருவிழாவை யொட்டி, அன்று கோயில் நடை சாத்தப்படும் என கோயில் ஆணையர் தெரிவித்தார்.
ஜன.,28ல் தைப்பூச தெப்ப தேரோட்டத்தை யொட்டி அன்று காலை 3:00 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறந்து, 3:30 முதல் 4:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். காலை 10:30 மணிக்கு மேல் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடானதும், கோயில் நடை சாத்தப்படும்.பின் கோயிலின் உப கோயிலான லெட்சும னேஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்மன் எழுந்தரு ளியதும் மகா தீபாராதனை நடக்கும். அன்று மாலை 6:00 மணிக்கு லெட்சுமணர் தீர்த்த குளத்தில் அலங் கரித்த தெப்ப தேரில் சுவாமி, அம்மன் எழுந் தருளியதும் தெப்ப தேரோட்டம் நடக்கும். பின் அங்கிருந்து புறப் பாடாகி கோயிலுக்கு சுவாமி, அம்மன் சென் றதும் கோயில் நடை திறந்து, அர்த்தசாம மற்றும் பள்ளியறை பூஜை நடத்தப்பட்டு, மீண்டும் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.