சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2021 09:01
மயிலாடுதுறை: சீர்காழியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மாரியம்மனை மனமுருக பிரார்த்தனை செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் தீமிதி திருவிழா தை மாதம் முதல் வெள்ளி அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கி இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்பாள் புறப்பட்டு வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இதனையடுத்து இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று காலை பால் குடங்கள் மற்றும் அலகு காவடி எடுத்து வந்த பக்தர்கள் அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்து வழிபட்டனர் மாலை தீமிதி உற்சவம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளுக்கு மாவிளக்கு போட்டு தீமிதிப்பு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.