ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வருஷாபிேஷகத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது. இவ்விழா ஜன.22ல் துவங்கியது. நிறைவு விழாவான நேற்று ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம், லட்சார்ச்சனையை கோயில் பட்டர்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்தனர்.