வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தை பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாளை முதல் ஜன.29 வரை நான்கு நாட்கள் அனுமதிக்கபடுகிறார்கள். காலை 7:00 மணி முதல் பக்தர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர் மலையேற அனுமதிக்கபடுவார்கள். இரவில் தங்க அனுமதி இல்லை. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் செய்து வருகின்றனர்.