மரக்கிளையில் இங்கும் அங்கும் தாவும் குரங்கு போல மனம் எப்போதும் ஆசை வயப்பட்டு தாவித் திரியும். இதனையே மனம் ஒரு குரங்கு என்று குறிப்பிடுவர். ராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயரும் குரங்கு தான். ஆனால், அவரைப் போல அறிவும், ஆற்றலும் நிறைந்தவர் உலகில் வேறு யாருமில்லை. ஆஞ்சநேயர் ராமநாமத்தால் சேது சமுத்திரத்தைக்கடந்து செல்லும் பலம் பெற்றார். ஆசை வயப்பட்ட மனிதன், தாவித்திரியும் குரங்கைப் போல இருக்கிறான். ராமபக்தி என்னும் கயிறைக் கட்டிக் கொண்டு விட்டால் அனுமனைப் போல அறிவுநுட்பம், பணிவு, தைரியம் மிக்க பலசாலியாகி விடுவான்.