Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் தியாகராஜ ஸ்வாமிகளின் 55ம் ... இளங்காமுடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா இளங்காமுடி அய்யனார் கோயிலில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் தங்க கோபுர கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் தங்க கோபுர கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
12:02

சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் புனித நீர் ஊற்றும் போது ட்ரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.


சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரசித்தி பெற்ற அஷ்டாங்க விமானத்தின் முதல் நிலைக்கு ஸ்ரீ சவுமியநாராயணன், ஸ்ரீ எம்பெருமானார் சாரிடபிள் ட்ர்ஸ்ட்,திருப்பணிக்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோரால் தங்க கவசத் திருப்பணி நடந்தது. விமானத்தின் முதல்நிலையில் உச்சியில் 1000 ஆண்டு பழமையான புராதன தங்கக் கலசத்தில் மீண்டும் தங்க கவசம் 6 அடுக்கில் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து பத்மம், மகா பத்மம், மாலைக்கட்டு, கண்ணாடிச்சட்டம், பண்டியல், கர்ணக்கட்டு, நாசித்தலை, கர்ணக்கட்டு என்று 22.4 கிராம் வீதம் 1400 சதுர அடியில் 32 கிலோ அளவிலான தங்கத்தகடு 7 அடுக்கில் பதிக்கப்பட்டுள்ளது.


தற்போது திருப்பணி நிறைவடைந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டாச்சார்யார்களால் யாகசாலை பூஜை பிப்.2 முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நான்கு, ஐந்தாம் கால யாக பூஜைகளும், நேற்று காலை 7:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜையும், காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி, மாலை 4:00 மணிக்கு ஏழாம் கால யாகபூஜையும் இரவு 8:00 மணிக்கு பூர்ணாகுதியும் நடைபெற்றது. இன்று காலை 5:00 மணிக்கு புண்யாகவாசனம்,சிறப்பு ேஹாமம், காலை 8:00 மணிக்கு பூர்ணாகுதி தீபராதனை நடந்து பட்டாச்சார்யார்களால் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடு ஆகி விமானம் சென்றது. தொடர்ந்து காலை 9:26மணி முதல் காலை 10:18 மணிக்குள் தங்க விமானத்திற்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ட்ரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தானத்தினர், கோயில் அனைத்து நிர்வாக கைங்கர்யஸ்தர்கள்,பட்டமங்கலம் நாட்டார், மயில்ராயன்கோட்டை நாட்டார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar