காரைக்குடி : காரைக்குடி ஸ்ரீராம நவமி மஹோத்ஸவ சபாவில், ராம ஜென்மபூமி ஆலய நிர்மாணப் பணிக்காக நிதி சேகரிப்பு விழா நடந்தது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அகில இந்திய பொதுச் செயலாளர் மிலிந்த் ப்ராண்தே குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, பாதரக்குடி மடாதிபதி ரவீந்திரா சுவாமிகள், மாநிலச் செயலாளர் ராம.சத்தியமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ்., மாநில செய்திதொடர்பாளர் சூர்யநாராயணன், மாநில சேவா அமைப்பாளர் கருப்பணன், ராமேஸ்வர மண்டல தலைவர் மங்களேஸ்வரன்மாவட்டத் தலைவர் நாச்சியப்பன் கலந்து கொண்டனர்.
பொதுச் செயலாளர் மிலிந்த் ப்ராண்தே பேசும்போது; ராமர் கோயில் கட்டுவதற்கு அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், ராம ஜென்மபூமி தீர்த்த ேக்ஷத்ர அறக்கட்டளையின் சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. மக்களிடம் நேரடியாக சென்று நிதி திரட்டுவதற்காக, இந்திய அளவில் 5 லட்சம் கிராமங்களிலும், தமிழகத்தில் 20 ஆயிரம் கிராமங்கள் மற்றும் 60 லட்சம் குடும்பங்களை நேரடியாக சந்தித்து நிதி திரட்ட உள்ளோம்.ராமர் கோயிலுக்கு, பத்து ரூபாயிலிருந்து எவ்வளவு நிதி வேண்டுமானாலும் வழங்கலாம்.ஆன்லைனிலும் நிதியை வழங்கலாம். இன்னும் மூன்றரை ஆண்டுகளில் கோயில் பணி முடிக்கப்படும் என்றார்.