பதிவு செய்த நாள்
03
பிப்
2021
12:02
பழநி: தைப்பூச விழாவுக்கு பிறகும் பழநி மலைக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்தனர்.காவடி, பால்குடங்கள் எடுத்தும், அலகு குத்தியும், பஜனைகள் பாடி, ஆட்டம் பாட்டத்துடன் கிரிவீதிகளில் வலம் வந்தனர். மலைக்கோயில் வெளிப்பிரகாரம், குடமுழுக்கு மண்டபங்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. குறிப்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பணிக்கம்பட்டியில் இருந்து பாதயாத்திரை, 21 ரேக்ளாவண்டி மற்றும் வாகனங்கள் மூலம் வந்திருந்த ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன்பின் ஒரே நேரத்தில் கிளம்பி சென்றனர்.