திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மூல கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், தெற்கு வீதியில் அமைந்துள்ள, பழமையான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு சுப்ரபாதம், மூன்றாம் கால யாகசாலை பூஜை துவக்கம், 7:00 மணிக்கு மஹா பூர்ணாஹீதி, 7:30 மணிக்கு யாத்ரா தானம், 7:45 மணிக்கு விமானம், ராஜகோபுரங்களுக்கு வேதமந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், மூலவர் அம்மனுக்கு கலசாபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. முரளிதர ஐயர் யாகசாலை பூஜைகளை முன்னின்று நடத்தினார். ஆரிய வைசிய சங்க தலைவர் சர்வேஸ்வரன் தலைமையிலான சமூகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.