பதிவு செய்த நாள்
04
பிப்
2021
06:02
புதுச்சேரி; புதுச்சேரி வந்த இளைஞர் சத்பாவன அமைதிக்குழுவிற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப் பட்டது.அமைதி, நட்புணர்வு, சகோதரத்துவம், தேசிய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தி திரிபுரா மாநில தலைநகர் அகர்தாலாவில் இருந்து கடந்த 21ம் தேதி யுவா விகாஷ் கேந்திராவின் மாநில தலைவர் தேபாஷிஷ் தலைமையில் 15 இளைஞர்கள் கொண்ட சத்பாவன அமைதிக் குழு பல்வேறு மாநிலங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இரண்டு வேன்களில் புறப்பட்டது.
இக்குழு, புவவேஸ்வர், ராஞ்சி, வார்தா, ைஹதராபாத், சென்னை வழியாக நேற்று புதுச்சேரி வந்தடைந்தது. குழுவிற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.புதுச்சேரி தேசிய இளைஞர் திட்ட மாநில தலைவர் ஆதவன் வரவேற்றார். மாவட்ட சப் கலெக்டர் தமிழ்ச்செல்வன், இளைஞர் குழுவினருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். சப் கலெக்டர் சக்திவேல் வாழ்த்தி பேசினார். புதுச்சேரி சர்வோதய சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு அமைதி, நட்புணர்வு, சகோதரத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர் அமைதி குழு ராமேஸ்வரம் புறப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குடும்பத்தினரை குழுவினர் சந்தித்து பேசுகின்றனர். இந்த சத்பாவன அமைதிபயணம் வரும் மார்ச் 13ம் தேதி அகர்தலாவில் நிறைவு பெறுகிறது.