அன்னூர்: திம்மநாயக்கன்புதூர் பைரவர் கோவிலில், இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில், பைரவர் கோவில் உள்ளது. இங்கு இறைவன் வடக்கு நோக்கி வீற்றிருப்பது விசேஷமானதாகும். ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவரை வணங்கினால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமி நாளான இன்று மாலை பைரவர் கோவிலில், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர்.