புதுச்சேரி; புதுச்சேரியில் தியாகராஜர் ஆராதனை விழா நாளை மறுநாள் (7ம் தேதி) லாஸ்பேட்டை, இ.சி.ஆர்., சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நடக்கிறது.அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு, தியாகராஜர் ஆராதனை இசை நிகழ்ச்சியை கோபால கிருஷ்ணன் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, காலை9 முதல் 10.15 வரை பஞ்சரத்ன கீர்த்தனைகளும், காலை 10.15 முதல் மாலை 5 மணி வரை தனிக்கலைஞர்களின் இசை கச்சேரியும் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு இசை நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி, பாரதியார் பல்கலைக் கூடம், இந்திரா காந்தி தேசிய கலை மையம், அயன் பைன் ஆர்ட்ஸ் அகாடமி ஆகியவை இணைந்து செய்துள்ளன.