காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு கோவில் நகரத் திட்டத்தின் கீழ் ரூ.5.93 கோடி மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதியை முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.காரைக்கால் திருநள்ளாறு பேட்டை சாலையில் சுற்றுலாத் துறை கோவில் நகர திட்டத்தில் ரூ. 5.93 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவக கட்டடம் திறப்பு விழா நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கி திறந்து வைத்தார். அமைச்சர் கமலக் கண்ணன் முன்னிலை வகித்தார்.மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் திருநள்ளாறு ஹெலிபேட் மைதானம் மற்றும் சுரக்குடி, செருமா விலங்கை பகுதிகளில் இரண்டு பஸ் நிலையம், திருவேட்டக்குடி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., துணை மாவட்ட ஆட்சியர் ஆதாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.