பதிவு செய்த நாள்
05
பிப்
2021
03:02
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனுார் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழாவையொட்டி, கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாயக்கனுார் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில், பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. நேற்று காலை, 8:30 மணிக்கு சூரிய பிரபை, மதியம், 3:00 மணிக்கு கருடவாகனம், மாலை, 4:30 மணிக்கு அனுமந்த வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று வெள்ளிக்கிழமை காலை, 8:30 மணிக்கு, யாழி வாகனம், மதியம், 3:00 மணிக்கு நாச்சியார் திருக்கோலம், புஷ்ப பல்லக்கு, மாலை, 4:30 மணிக்கு சந்திரபிரபை நிகழ்ச்சிகள் நடக்கிறது.