பதிவு செய்த நாள்
05
பிப்
2021
03:02
திம்மராஜம்பேட்டை ; வலம்புரி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று, விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை செட்டித்தெருவில், வலம்புரி செல்வ விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலில், கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை, 7:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை நடந்தன. காலை, 9:30 மணிக்கு, கலச புறப்பாடு முடிந்து, 9:45 மணிக்கு, கோபுர கலசத்திற்கு, சிவனடியார்கள், புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். இதில், திம்மராஜம்பேட்டை சுற்றியுள்ள பல கிராம மக்கள் பங்கேற்றனர்.