பதிவு செய்த நாள்
06
பிப்
2021
12:02
ஒன்றுபடுத்துகிறார் சாந்தானந்தர்
* கடவுளின் பிள்ளைகளான நாம் அனைவரும் ஒரே ஜாதியினர்.
* யாரிடமும் உயர்வு, தாழ்வு காட்டாதீர். அனைவரும் நம் சொந்தமே.
* செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும்.
* கடவுள் ஒருவரே உலகில் என்றென்றும் நிலையானவர்.
* நான் நல்லவன் என கர்வப்பட வேண்டாம். உங்களை விட நல்லவர்களும் உலகில் இருக்கிறார்கள்.
* பிறரை இழிவாக கருதுபவன், தன் நிலையில் இருந்து தாழ்ச்சி அடைவான்.
* அறிவாளிக்கு பிறர் மீது பொறாமையோ, பொருள் ஆசையோ ஏற்படாது.
* பிறரது குறையை சிந்திப்பவன் பாவி. தன்னை உணர்ந்து மகிழ்பவன் ஞானி.
* பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தர்மம் செய்யாதீர்.
* மனித நேயத்துடன் பிறருக்கு இயன்ற அளவில் உதவுங்கள்.
* எப்போதும் கடவுளை சிந்தித்தால் நிம்மதியுடன் வாழலாம்.
* பொன், மண், பெண், புகழ் ஆசைகளில் சிக்கியவர்கள் மீள்வது கடினம்.