பதிவு செய்த நாள்
08
பிப்
2021
06:02
பொள்ளாச்சி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பொதுமக்கள் பங்களிப்பு குறித்து, கோட்டூர் சுற்றுப்பகுதியில், ரத யாத்திரை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அயோத்தி ராமஜென்ம பூமியில், ராமர் கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுக்க உள்ள ஹிந்துக்களின் கலாசார அடையாளமாக, ராமர் கோவில் உணரப்பட வேண்டும் என்ற நோக்கில், கோவில் கட்டுவதற்கு பொதுமக்களின் பங்களிப்பு திரட்டப்படுகிறது.பொள்ளாச்சி பகுதியில் இப்பணியில், ராமஜென்ம பூமி தீர்த்த ேஷத்திரம் அறக்கட்டளை, பொதுமக்களை சந்தித்து ராமர் கோவில் கட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்தி, பங்களிப்பை திரட்டுகிறது. அதன் ஒரு பகுதியாக, கோட்டூர் பகுதியில் ராமர் ரத யாத்திரை நிகழ்ச்சி நடந்தது.கோட்டூர் ஸ்ரீராம் முருகன் திருமண மண்டபத்தில், மண்டபத்தின் உரிமையாளர் ராமசுப்ரமணியம் ரதத்துக்கு சிறப்பு பூஜை செய்து யாத்திரையை துவங்கி வைத்தார்.இதையடுத்து, ராமர் ரதம் மங்கள வாத்தியங்கள் முழங்க, குதிரை, காளைகள் அணிவகுப்புடன் கோட்டூர் கரிவரதராஜ பெருமாள் கோவில், ஜல்லி வீரம்மன் கோவில், குமரன் கட்டம் மகாலட்சுமி கோவில், பொங்காளியூர் உச்சி மாகாளியம்மன் கோவில் என, 5 கி.மீ., துாரம் பயணித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது.ரத யாத்திரையின் போது, பொதுமக்கள் தங்களால் இயன்ற சிறு தொகையை பங்களிப்பாக அளித்து, தேசிய ஒருமைப்பாட்டை காட்ட வேண்டும், என, வலியுறுத்தப்பட்டது.