பதிவு செய்த நாள்
09
பிப்
2021
09:02
அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும், ஹிந்து கடவுள் ராமருக்கான கோவிலுக்கு, பைசாபாதைச் சேர்ந்த, முஸ்லிம்கள் நன்கொடை அளித்து உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன; இதற்கு, பல்வேறு தரப்பினரும் நன்கொடை அளித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் பைசாபாதைச் சேர்ந்த, முஸ்லிம்கள் இணைந்து, 5,100 ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். ராமர் ஹிஸ்துஸ்தானுக்கு சொந்தம்; நாங்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். ஹிந்துக்கள் எங்களுடைய சகோதரர்கள். கோவில் கட்டுவதற்கு தொடர்ந்து நன்கொடை வழங்குவோம், என, அயோத்தி முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் உறுப்பினர் ஹாஜி சயீது அகமது கூறியுள்ளார். நம் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவுவதை உலக நாடுகளுக்கு மீண்டும் உறுதி செய்துள்ளோம். ராமர் கோவிலுக்கு முஸ்லிம் சகோதரர்கள் நன்கொடை அளித்துள்ளதை வரவேற்கிறோம், என, பைசாபாதின் ராம் பவனின் தலைவர் சக்தி சிங் கூறியுள்ளார்.