திருவெண்ணெய்நல்லுார் - இளந்துறை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் உள்ள வீர விசித்திர ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இளந்துறை கிராமத்தில் உள்ள வீர விசித்திர ஆஞ்சநேயர் சாமிக்கு அனுமர் ஜெயந்தி முதல் மூல நட்சத்திர தின விழா நடைபெற்றது.அதனையொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களில் அபிேஷகம், தீபாராதனை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது.பூஜைகளை பாஸ்கர் பட்டாச்சாரியார் செய்து வைத்தார். செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராமலிங்கம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் காண்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.