திருப்புல்லாணி: திருப்புல்லாணி மேற்குத் தெருவில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று வருடாபிஷேக விழால் மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், திரவியப் பொடிகளால் அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. யாகசாலை பூஜைகளை ரகுபதி, ஓதுவார் அரியமுத்து செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் பூஜகர் சேதுராணி செய்திருந்தார்.