பாகூர்; கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் துலுக்கான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜை, மகாலட்சுமி ேஹாமம், கோ பூஜை, மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, யாக சாலை பிரவேசம், இரவு 9 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, 9.30 மணிக்கு யாத்ரா தானம், கலச புறப்பாடு நடந்தது.பின்னர் காலை 10 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.அமைச்சர் கந்தசாமி உட்பட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.