பதிவு செய்த நாள்
09
பிப்
2021
05:02
பொள்ளாச்சி,:நெகமம், நாகர் மைதானம் அருகே அங்காளம்மன், விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலில் சமீபத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கள இசையுடன் ஆகம பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்காம் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு கோபுர கலசம், ஆலய வலம் கொண்டு வரப்பட்டது. காலை, 9:45 மணிக்கு அங்காளம்மன் கோவில் கோபுர கும்பாபிஷேகம் நடந்தது, தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு அங்காளம்மன் மற்றும் விநாயகர் சன்னதியில் மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.