பழநி : பழநி முருகன் கோயில் உண்டியல் 20 நாட்களுக்கு பின் திறந்து எண்ணியதில் ரூ. 2 கோடியே 82 லட்சத்து 14 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழா நடந்தது. இதையொட்டி இன்றுவரை பாதயாத்திரை பக்தர்கள், வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.இதையொட்டி பழநி முருகன் கோயில் உண்டியல்கள் ஜன.20க்கு பின் நேற்று திறந்து எண்ணும் பணி நடந்தது. இதில் ரொக்கமாக ரூ.2 கோடியே 82 லட்சத்து 14 ஆயிரத்து 370, தங்கம் -910 கிராம், வெள்ளி- 17ஆயிரத்து 840 கிராம்,வெளிநாட்டு கரன்சிகள்- 57 கிடைத்துள்ளது. கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர்கள் செந்தில்குமார், அனிதா, வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது.