கீழக்கரை: கீழக்கரை அருகே முனீஸ்வரம் பகுதியில் உள்ள தர்ம முனிஸ்வரர் கோயில் வளாகத்தில் ராகு கேது பகவான் பிரதிஷ்டை விழா நடந்தது. மூலவருக்கு பால், இளநீர், தயிர், திரவிய பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேக ஆராதனை நடந்தது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.