பதிவு செய்த நாள்
10
பிப்
2021
04:02
ஓசூர்: ஓசூரில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சியை, பல ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். ஓசூரில் திருவையாறு என்ற கர்நாடக இசை நிகழ்ச்சி, ஓசூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சியின் தலைவர் மனோகரன், ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், ஹோஸ்டியா முன்னாள் தலைவர் முரளிபாபு, டேலன்ட் டிரைப்ஸ் இயக்குனர் செல்வின் தாமஸ், சியாமளா குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஓசூரிலுள்ள கர்நாடக இசை கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், குரல் தேர்வு நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 101 இசை கலைஞர்கள் பங்கேற்று, பஞ்சரத்தின கீர்த்தனைகள், தியாகராஜ ஆராதனைகளை பாடினர். வேதமும், நாதமும் என்ற தலைப்பில், பிரம்ம ஸ்ரீசர்மா சாத்திரிகள் சொற்பொழிவாற்றினார். மாளவிகா சுந்தர், சந்தீப் நாராயணன் ஆகியோரின் இசை கச்சேரியும், நெய்வேலி ராதாகிருஷ்ணனின் இரட்டை வயலின் இசை கச்சேரியும் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.