பழநி : பழநி அடிவாரம் பகுதியில் அயோத்தி ராம ஆலய நிர்மாண நிதி சமர்ப்பண விழா நடந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ராம ஜென்மபூமி தீர்த்த ேஷத்திர அறக்கட்டளை சார்பாக நிதி சேகரிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பழநியிலும் நிதி சேகரிக்கப்படுகிறது. இதையடுத்து பழநியில் நேற்று பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமையில் சமர்ப்பண விழா நடந்தது.இதில் ரூ.5 லட்சம் நிதி திரட்டப்பட்டது. தமிழக பிராமணர் சங்க தலைவர் ஹரிஹரமுத்து, வி.எச்.பி., மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், ஆர்.எஸ்.எஸ்., மதுரை கோட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் நிதி வழங்கினர்.