நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2021 10:02
காரைக்கால்: நித்யகல்யாணப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவுக்கு, பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.காரைக்கால் பாரதியார் சாலையில் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.வரும் 15ம் தேதி விஷ்வக்சேனர் ஆராதனம் புறப்பாடு, 17ம் தேதி திருப்பல்லக்கு சந்திரபிரபை, 22ம் தேதி திருக்கல்யாணம், 24ம் தேதி திருத்தேர் வீதியுலா நடைபெறுகிறது.