பக்தர்களின் வீடுகளுக்கே செல்லும் பழநி பிரசாதம்: ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2021 10:02
பழநி: பழநி கோயில் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பும் திட்டத்தை தபால் துறையுடன் இணைந்து கோயில் நிர்வாகம் செய்ய உள்ளது.
பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.அறநிலையதுறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பக்தர்கள் வீட்டிலிருந்தே பிரசாத தொகுப்பை தபால் மூலம் பெறலாம் என அறிவித்தார். இத்தொகுப்பில் அரை கிலோ பஞ்சாமிர்தம், 10 கிராம் இயற்கை முறையில் தயாரித்த விபூதி, பழநி முருகன் படம் ஆகியவை இருக்கும்.
இதனைப்பெற கோயில் இணைய தளம் www.tnhrce.gov.in மூலம் அல்லது தபால் நிலையங்களில் ரூ.250 செலுத்தி பதிவு செய்து வீட்டுக்கே வரவழைக்கலாம்.இதற்காக தபால் துறையுடன், கோயில் நிர்வாகம் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துஉள்ளது. ஒப்பந்தத்தில் தபால் துறையின் தென்மண்டல இயக்குனர் மோகன்தாஸ், கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி கையெழுத்திட்டனர்.இதன்படி பிப்.,15 முதல் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் பழநி பிரசாதம் பெற விரும்பினால் பதிவு செய்யலாம். பதிவு செய்த நாளில் இருந்து 5 நாட்களுக்குள் வீட்டில் டெலிவரி செய்யப்படும்.