பதிவு செய்த நாள்
11
பிப்
2021
11:02
உடுமலை : தை அமாவசையையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
உடுமலை, திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி மற்றும் தை அமாவாசையின் போது, விவசாய சாகுபடி செழிக்கவும், கால்நடை வளம் பெருகவும், அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, மாட்டு வண்டிகளில், பயணித்து வழிபடுவது வழக்கம். இன்று தை அமாவாசையையொட்டி, கோவிலில், அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உடுமலை சுற்றுப்பகுதியைச்சேர்ந்த விவசாயிகள், அமணலிங்கேஸ்வரரை தரிசிக்க, நேற்று மாலையில் இருந்தே மாட்டு வண்டிகளில், திருமூர்த்திமலைக்கு அணிவகுத்தனர். உடுமலை போக்குவரத்துக்கழக கிளை சார்பில், திருமூர்த்திமலைக்கு, உடுமலையிலிருந்து சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. இந்து அறநிலையத்துறை சார்பிலும், கோவிலில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.