வானுார் : தி.கூட்ரோட்டில் அங்காளம்மன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு, விளக்கு பூஜை நடந்தது. தி.கூட்ரோடு, மயிலம் ரோட்டில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் நேற்று முன்தினம் தை அமாவாசையை முன்னிட்டு விளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 400க்கும் மேற்பட்ட பெண்கள், பூஜை செய்தனர்.நிகழ்ச்சியை சக்ரபாணி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.