புதுச்சேரி : புதுச்சேரி நேரு வீதி திருப்பதி தேவஸ்தான கோவில் பாலாலய சம்ரோக்ஷனம் துவங்கியது. புதுச்சேரி நேரு வீதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோவில் கட்டடம் பழுதானதால் 7 ஆண்டுகளுக்கு முன் கோவில் மூடப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் முகப்பு பகுதி கட்டடம் இடிந்து விழுந்தது. இதையடுத்து கோவில் பாலாலயம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.கடந்த 10ம் தேதி, விஸ்வகேசன ஆராதனை, அங்குரார்பனம், மகா தீபராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை, மாலையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று, காலை 8:42 மணிக்கு, பாலாலயம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம், சென்னை, புதுச்சேரி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.