காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.
காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறும். நேற்று முன்தினம் தை அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பின்னர் திருமஞ்சனம்.தீபாராதனை நடைபெற்றது.மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.