திண்டுக்கல்:திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூத்த மலர் பூ அலங்காரத்துடன் நேற்று முன்தினம் (பிப்.11) துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், அம்மன் தேரில் நகர் பகுதியில் வீதியுலாவும் நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (பிப்.14) சாட்டுதல் நிகழ்ச்சி, பிப்.16 ல் கொடியேற்றம், மார்ச் 1ல் ஊஞ்சல் உற்ஸவம், மார்ச் 2ல் தெப்ப உற்ஸவம் நடக்கிறது.