பழநியில் முருகன், வள்ளிக்கு பக்தர்கள் சீர்வரிசை வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2021 06:02
பழநி - பழநியில் தைப்பூசத் திருவிழாவில் முருகனை மணமுடித்த வள்ளிக்கு, பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர்.பழநி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் நடந்தது. அதில் முத்துக்குமாரசாமி, -வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.இதையடுத்து நேற்று வள்ளியின் இனம் சார்ந்த குறவர் சமூகத்தினர் சார்பில் பக்தர்கள் முருகனுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர். இதில் தேன், தினைமாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு ஆகியவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்தின் முன்பாக மயிலாட்டம், சிலம்பாட்ட நிகழ்ச்சிகளுடன் மலைக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்ததாக தெரிவித்தனர்.