திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த தச்சூர் கிராமத்தில் நல்லதங்காள், மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திட்டக்குடி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள நல்லதங்காள், பட்டத்தாள், ஆலத்திஅம்மாள், காசிமுனி, விநாயகர், மதுரைவீரன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்பந்தன மகாகும்பாபிஷேக விழா நடத்த கிராம மக்களால் முடிவெடுக்கப்பட்டது. விழாவையொட்டி நேற்றுமாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜைகளுடன் துவங்கியது. இன்று நவக்கிரக பூஜை, தன பூஜை செய்யப்பட்டு பின் கலசத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.