கண்டாச்சிபுரம் - விழுப்புரம் அடுத்த கெடார் முத்தாலம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. விழுப்புரம் அடுத்த கெடார் முத்தாலம்மன் கோவிலில் கடந்த 6ம் தேதி திருவிழா நடைபெற்று வருகிறது. அதனையொட்டி நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.முன்னதாக சாகை வார்த்தல், சக்தி கரக ஊர்வலம், குதிரையில் செல்லியம்மன் ஊர்வலம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.