ரிஷிவந்தியம்; சாத்தப்புத்துார் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் துவங்க உள்ளதையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த சாத்தப்புத்துார் கிராமத்தில், 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருணைநாயகி அம்மன் உடனுறை ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து, சில சுவாமி சிலைகள் திருடப்பட்டுள்ளன. மீதமுள்ள சுவாமி சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. கோவில் இருந்ததற்கு அடையாளமாக கட்டடத்தின் அடித்தளம் மட்டுமே உள்ளது.இந்நிலையில், இக்கோவிலை திருப்பணி செய்ய ஊர்பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு, திருவாரூர் நடராஜர் சுவாமிகள் தலைமையில் மார்ச் 6ம் தேதி, பூமி பூஜை நடைபெற உள்ளது.கோவில் கட்டுமான பணி நல்லமுறையில் நடைபெற வேண்டி கோவில் அருகே திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நடராஜர் சுவாமிகள் பொதுமக்களிடம் பேசி, நிதி திரட்டினார்.