Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஜெகமுத்து மாரியம்மன் கோவிலுக்கு ... சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில்  வரும் 19ம் தேதி ரத சப்தமி சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் சிவன் கோவில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
கும்பகோணம் சிவன் கோவில்களில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 பிப்
2021
04:02

 தஞ்சாவூர்: கும்பகோணத்தில், மாசிமக திருவிழா, வரும் 26ம் தேதி நடக்கிறது. இதற்காக, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய, ஆறு சிவன் கோவில்களில், இன்று காலை, கொடியேற்றம் நடைபெற்றது.

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில், கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க, 10 நாள் உற்சவ விழாக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, வரும் 20ம் தேதி 63 நயன்மார் வீதியுலா, 21ம் தேதி, ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு,  23ம் தேதி, வெண்ணைத்தாழி, 24ம் தேதி காலை ஆதி கும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் , 25ம் தேதி மாலை அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழ சோமேஸ்வரர்  கோவில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 26ம்  தேதி, மகாமகம் குளத்தில், முற்பகல், 12.30மணிக்கு மேல், 12:45 மணிக்குள், மாசிமக தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. அப்போது 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள், மகாமக குளத்தின் கரைகளில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர். மாசி மகத்தை முன்னிட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில், உற்சவம், நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar