சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வரும் 19ம் தேதி ரத சப்தமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2021 04:02
செஞ்சி : சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வரும் 19ம் தேதி ரத சப்தமி விழா நடைபெற உள்ளது.
செஞ்சி அடுத்த சிங்கவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் மாசி மாத சப்தமி திதியை முன்னிட்டு ரத சப்தமி விழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.அதனையொட்டி அன்று காலை 6:00 மணிக்கு சூரிய பிரபை வாகனமும், 8:00 மணிக்கு சேஷவாகனமும், 10:00 மணிக்கு பெரிய திருவடி எனும் கருட சேவையும், 12:00 மணிக்கு குதிரை வாகனமும், 1:00 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், அலங்காரம் நடைபெறுகின்றன. பிற்பகல் 2:00 மணிக்கு அனுமந்த வாகனமும், மாலை 4:00 மணிக்கு யானை வாகனமும், 6:00 மணிக்கு சந்திரபிரபை என ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிங்கவரம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.