அதிகம் பயன் தருவது சூரியனா சந்திரனா என விவாதம் நடந்தது. சூரியனால் தான் அதிகப் பயன் என பலர் கருத்து தெரிவித்தனர். அவர்களை கேலி செய்ய விரும்பிய முல்லா ‘‘என் கருத்தைக் கூறலாமா?’’ என்றார். பொது விவாதம் என்பதால் யார் பேசவும் தடையில்லை என்றனர். ‘‘ சந்திரனால் தான் உலத்திற்கு அதிக நன்மை கிடைக்கிறது. பகலில் இயற்கையாகவே வெளிச்சம் கிடைப்பதால் சூரியனின் உதவி தேவையில்லை. இரவில் இருளைப் போக்கி குளிர்ந்த ஒளி தருவதால் சந்திரனே அதிக பயனளிக்கிறது’’ என்றார். அவர் கிண்டலுக்காக பேசுவதை அறிந்த அறிஞர்கள் சிரித்தனர்.