பதிவு செய்த நாள்
19
பிப்
2021
10:02
திருப்பூர்: ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ராவின் திருப்பூர் மாவட்ட நிதி சேகரிப்பு குழுவினர் அறிக்கை:அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்புண்ணிய பணியில், பங்கேற்கும் வகையில், நாடு முழுதும் உள்ள மக்கள் நன்கொடை வழங்கிவருகின்றனர். திருப்பூரில், பொதுமக்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்கள், பங்களிப்பு தொகையை வழங்கிவருகின்றனர்.ஸ்ரீ ராம பக்தர்கள், இந்து இயக்கத்தினர், நகர பகுதி, கிராமங்கள் தோறும் சென்று, நிதி சேகரித்து வருகின்றனர். வரும் 26ம் தேதி வரை, நிதி சேகரிப்பு நடைபெறும்.திருப்பூர் பகுதி ஆடை உற்பத்தி உட்பட அனைத்து வகை நிறுவனத்தினரும்,நன்கொடை வழங்க விரும்பும் தொழிலாளரிடமிருந்து, குறைந்தபட்சம் 100 ரூபாய் மட்டும் சேகரித்து வழங்கலாம்.ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி அளிக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்தினர், Shri Ram Jenmabhoomi Theerth Kshethra என்கிற பெயரில், செக் அல்து டி.டி.,, ஆக வழங்க வேண்டும்.நிதி வழங்க விரும்புவோர், 98422 62650, 96594 41487, 63833 21583 என்கிற எண்களில் அழைக்கலாம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.