ராமேஸ்வரம்: ராமர் பூஜித்த தனுஷ்கோடியில் தங்கத்திலான வில், அம்பு மற்றும் மணலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூஜை செய்து, கடலில் புனித நீராடினார்.
ராவண வதம் முடிந்து சீதையை மீட்டு தனுஷ்கோடி திரும்பிய ராமர், பிரம்மஹத்தி தோஷம் நீங்க அங்குள்ள மணலில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார். கடற்கரையில் தங்கத்தில் வடிவமைத்த சிறியஅளவு வில், அம்புக்கு பூஜை செய்து தனுஷ்கோடி கடலில் செலுத்தினார். மணலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜை செய்து கடலில் புனித நீராடினார். பின்னர் அவர் ராமேஸ்வரம் காஞ்சி மடத்திற்கு வந்தார்.இன்று யாக பூஜைஉலக நன்மைக்காக ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் இன்று காலை 6:30 மணிக்கு மகா ருத்ர யாகம் துவங்குகிறது. விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்கிறார். இப்பூஜை பிப்., 22 வரை நடக்கும். அன்று (பிப்.,22) ராமநாதசுவாமி கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்ய உள்ளார்.