பதிவு செய்த நாள்
23
பிப்
2021
11:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், சுந்தரர் இடக்கண் பெற்ற வைபவம், நேற்று நடைபெற்றது.
சைவ குறவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரர், சிவபெருமானிடம் அதிக பற்று உடையவர். அவருக்கு பார்வை பறிபோன பின், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலை அடைந்து, சிவபெருமானை பூஜித்து பாடல்கள் பாடியதும், அவருக்கு, இடக்கண் பார்வை, மீண்டும் கிடைத்ததாக கூறப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம், ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெறுவது வழக்கம். அந்த நிகழ்ச்சி, நேற்று காலை நடைபெற்றது. மூலவர் ஏகாம்பரநாதர் மற்றும் சுந்தரருக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.சுந்தரர் பாடிய பாடல்களை, கோவில் ஓதுவார் பாடினார். தொடர்ந்து, பல்லக்கில் அமர்ந்து, நான்கு ராஜ வீதிகளில், சுந்தரர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.