பதிவு செய்த நாள்
23
பிப்
2021
01:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, தேவம்பாடி காளிபாளையம், கோட்டை மாகாளியம்மன் திருவிழாவை முன்னிட்டு, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தேவம்பாடி காளிபாளையத்தில், கடந்த, 16ம் தேதி கோட்டை மாகாளியம்மன் திருவிழா சாட்டப்பட்டது. கடந்த, 21ம் தேதி ஜலத்துார் அய்யன் கோவிலில் அபிேஷக பூஜை நடந்தது.மேலும், பக்தர்கள் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் இருந்து, நேற்று மதியம், தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். இரவு, சித்தி விநாயகர், காமாட்சியம்மன், சென்னியாண்டவருக்கு அபிேஷகம் நடந்தது.இன்று, பெரிய கிணறு தீர்த்தம் கொண்டு வருதல், சக்தி பூவோடு, சக்தி கலசம் கொண்டு வருதல், உற்சவர் ரத ஊர்வலம், சென்னியாண்டவர் அழைத்தல் மற்றும் பரிவட்டம் கொண்டு வருதல் நடக்கிறது.நாளை,(24ம் தேதி) அதிகாலை அம்மன் திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை, நேர்த்தி பூவோடு எடுத்தல், உருவாரங்கள் செலுத்துதல் நடக்கிறது. வரும், 25ம் தேதி மஞ்சள் நீராடுதல், மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.