பதிவு செய்த நாள்
23
பிப்
2021
04:02
வீரபாண்டி: சேலம், அம்மாபேட்டை காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, நேற்று முகூர்த்த கம்பம் நடுதலுடன் துவங்கியது. மார்ச், 3ல் பூச்சாட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் வீதி உலா நடக்கவுள்ளது. மார்ச், 9ல் சக்தி அழைத்தல், 10, 11ல் பொங்கல் வைத்தல், 12ல் பால்குட ஊர்வலம் மற்றும் மூலவர் அம்மனுக்கு, 1,008 லிட்டர் பால் அபி?ஷகம் நடக்கிறது. மார்ச், 13ல் சத்தாபரண ஊர்வலம், 14ல் மஞ்சள் நீராட்டு உற்சவம், இரவில் கும்ப பூஜை, 15ல் ஊஞ்சல் உற்சவம், 16ல் சந்தனகாப்புடன் மாசி திருவிழா நிறைவு பெறும்.