Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நோய் தீர்க்கும் மத்துாரம்மா ஓம் சக்தி கோவிலில் இன்று வராஹி அம்மன் ஹோமம் ஓம் சக்தி கோவிலில் இன்று வராஹி ...
முதல் பக்கம் » துளிகள்
சனிப்பிரதோஷம்; சிவனை வழிபட 1000 மடங்கு அதிக பலன் கிடைக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சனிப்பிரதோஷம்; சிவனை வழிபட 1000 மடங்கு அதிக பலன் கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
10:02

சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை காத்த தினம் இது. இன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இன்று சிவனை வழிபட 5 ஆண்டுகள் தினமும் சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும். 


பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.


சிவன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி திதி வரும் நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் திரயோதசி திதி நாளில், பிரதோஷ விழா கொண்டாடுவது வழக்கம். இதில் சனிக்கிழமை நாட்களில் வரும் பிரதோஷ விழா, சிறப்பு வாய்ந்தது. இவ்விழா இன்று, 4ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சுருட்டப்பள்ளி ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் மாலை 4:00 மணிக்கு சிவபெருமான், நந்திக்கு பால், தயிர், தேன், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடக்கும். பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதே போல ஊத்துக்கோட்டை ஸ்ரீஆனந்தவல்லி சமதே திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி ஸ்ரீலோகாம்பிகா சமேத ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீபாபஹஒஸ்வரர் கோவில், ராமலிங்காபுரம் ஸ்ரீராமலிங்கேஸ்வர சுவாமி கோவிலும் சிறப்பு விழா நடக்கிறது. பெரியவண்ணாங்குப்பம் ஆத்மநாதர் கோவில், தேவந்தவாக்கம் ஸ்ரீதேவநாதீஸ்வரர் கோவில், காரணி காரணீஸ்வரர் கோவில், சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ விழா நடக்கிறது. ஈசனை சரணடைவோம்.. துன்பங்கள் நீங்கி மங்கள வாழ்வு பெறுவோம்!

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 
temple news
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.  * ... மேலும்
 
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar